அதிரை சிறப்பாக நடந்து முடிந்த அல்-மகாதிப் கிராஅத் போட்டி (படங்கள் இணைப்பு)

நேற்று 08/09/2017 வெள்ளிக்கிழமை அன்று அஸர் தொழுகையிலிருந்து 9:00 மணி வரையிலும் அதிரை மகாதிப் நடத்திய 5 ம் ஆண்டு மாபெரும் கிராஅத் அரங்கம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. (அல் ஹம்துலில்லாஹ்.)

தலைமை :- கிராஅத் அரங்கம் குழு

கிராஅத் :-அல் ஹாஃபிழ் S.அஹமது சரீப் அவர்கள்.

தலைமை உரை:- அப்துல் ஹமீத் அவர்கள்.

வரவேற்ப்புரை:- நைனா முஹம்மது அவர்கள் (தரஹர் தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி தலைவர்.

சிறப்புரை :- மெளானா S. அஹமத் சுலைமான்(சலாஹி) மற்றும் மெளானா அல் ஹாஃபிழ் M.G. சஃபியுல்லாஹ் அவர்கள்.

நடுவர் :- மெளானா H.M.கலீலுர் ரஹ்மான் (ஹஸனி) அவர்கள்.

நன்றியுரை:- மெளானா M.A. முஹம்மது இத்ரீஸ் ( ஹஸனி) அவர்கள் (கா.மு.கல்லூரி அரபிக் ஆசிரியர்)

நடத்துனர் மற்றும் தொகுப்புனர் :- S. நஜ்முதீன் ஹஜரத் அவர்கள்.( கா.மு.ஆ.மே.நி.பள்ளி)

மாஷா அல்லாஹ். கிராஅத் போட்டியில் காரிகளும், அல் ஹாஃபிழ்களும், ஒதிக் கொண்டிருக்கும் மாணவர்களும் கலந்து கொண்டு தான் கற்ற குர்ஆன் வசனங்களை அழகான முறையின் திறமைப்பட வெளிப்படுத்தினார்கள்.

ஜமாத்தார்கள் பெருவாரியாக இந் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

குறிப்பு:- இப் போட்டியினை அதிரை மாகதிப் குழுமம் 2013 ல் முதல் முதலில் செக்கடிப் பள்ளியில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு பள்ளி வீதம் நடத்தி கொண்டிருப்பதின் விளைவாக நாமும் ஓதி ஹாஃபிழாக வேண்டும் என்கிற ஆசை இளைஞர்கள் மத்தியில் தோன்றியதன் காரணத்தால்.

நமதூரில் அதிகமான ஹாஃபிழ்கள் உருவாகி இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் நமதூரில் தராவீஹ் தொழுகை வைப்பதற்க்கு ஆள் பற்றாக் குறையினால் வெளியூரிலிருந்து ஹாஃபிழ்களை அழைத்து வந்து தொழுகை வைக்கப்பட்டது.

இப்பொழுதோ ஒரு நபர் ஒன்று அல்லது இரண்டு சலாம் தான் தொழுகை வைக்க முடியும் என்ற நிலைக்கு ஹாஃபிழ்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இப் போட்டி நடத்துவதின் நோக்கம் ஹாஃபிழ்மார்களின் புகழ்களுக்காகவோ பெருமைக்காகவோ நடத்தப்படவில்லை மாறாக ஹாஃபிழ்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்க்கும் நம் பிள்ளைகள் ஓதுவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்க்காகவே இப் போட்டி நடத்தப்படுகிறது.

சிறப்பம்சம் என்னவென்றால் உலக கல்வியை படித்துக் கொண்டே மாணவர்கள் (பார்ட்டைம் ) பகுதி நேரம் குர் ஆனை மனனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாமும் நம் பிள்ளைகளை ஹாஃபிழாக்க உறுதி ஏற்ப்போம்.

வெற்றிப் பெற்ற ஹாஃபிழ்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

(இதில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.)

Close