அதிரை ஹக்கீம் டாக்டர் அவர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ மாமணி விருது வழங்கி கவுரவிப்பு(படங்கள் இணைப்பு)

லயன்ஸ் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்கள் தின விழாவில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டு அதிராம்பட்டினம் டாக்டர் அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு மாவட்ட ஆளுனர் வீரபாண்டியன் அவர்களால் மருத்துவ மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதில் 9 வருவாய் மாவட்டங்களிலிருந்து 100 க்கும் மேற்ப்பட்ட டாக்டர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க தலைவர் ஜலீலா முகம்மது முகைதீன் செயலாளர் சுப்பர் அப்துல் ரஹ்மான் பொருளர் அப்துல் ஹமீது மாவடட ஆளுனரின் நிதி ஆலோசகர் பேரா.அப்துல் காதர் வட்டாரத்தலைவர் பேரா.செய்யது அஹமது கபீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழா ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் கருணைக் கடல் செய்திருந்தார்

Close