அதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 இன் புதிய அலுவலகம் திறப்பு!

அதிரையின் தலையாய பிரச்சனையாக கருதப்படும் சுற்றுச்சூழல் பிரச்சனையை தீர்க்க அதிரையில் இமாம் ஷாபி கல்விக்குழுமம் மற்றும் அதிரை FM 90.4 அதிரை பேரூராட்சியுடன் இணைந்து சுற்றுசூழல் மன்றம் 90.4 என்ற தன்னார்வ அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் 01 ஆம் தேதி துவங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக பல்வேறு சுற்றுசூழல் பணிகள் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இதன் அலுவலக திறப்பு விழா நேற்று 11.09.2017 மாலை இமாம் ஷாஃபி(ரஹ்)பள்ளிவளாகத்தில் நடைபெற்றது.மன்ற நிறுவனர் ஹாஜி.எம்.எஸ்.தாஜுதீன் அவர்கள் அலுவலகத்தை திறந்துவைத்தார்.

Close