பாம்பன் பாலம்… ஒரு எச்சரிக்கை!

தென் மாவட்டங்களில் மிக முக்கிய சுற்றுலா தளமாக பாம்பன் பாலம் இருந்து வருகிறது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களின் மணிமண்டபம் திறக்கப்பட்டதில் இருந்து அங்கு செல்லும் மக்களின் கூட்டமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் ஏற்படும் தொடர் விபத்துகளில் சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொள்கின்றனர்.

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பேருந்து பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது போன்று அடிக்கடி வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்களில் சிக்கி கொள்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அங்கு சமீபத்தில் அமைக்கப்பட்ட சாலைகள். காரணம், இந்த சாலையில் மழை பெய்தாலோ அல்லது சற்று ஈரமான நிலையில் இருந்தாலோ வாகனங்களின் சக்கரங்கள் பிடிப்பு இன்றி வேகமாக வழுக்கி செல்வதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை அடுத்து கடந்த சில நாட்களில் 100 விபத்துக்களை பாம்பன் பாலம் சந்தித்துள்ளதாகவும், அதனை கேலி செய்யும் வகையில் கேக் வெட்டி அப்பகுதியினர் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமாகவும் வேகம் குறைவாகவும் சென்று விபத்துக்களை குறைக்கலாம்.

Close