அதிரை கடற்கரைத் தெருவில் ஆறு போல் வெளியேறும் கழிவுநீர்… நோய்கள் பரவும் அபாயம்(படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாய் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் உடைந்துள்ளது. இதனால் கழிவு நீர் மளமளவென வெளியேறி வீதிகளை சூழ்ந்துள்ளது. ஜும்மா பள்ளி எதிரில் உள்ள திடலில் ஆறு போல் ஓடும் இந்த கழிவு நீரால் தூர்நாற்றம் வீசிவருகிறது. பள்ளிவாசல், அரசு பள்ளி என மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இப்பகுதியில் ஓடும் இந்த கழிவு நீரால் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் பேரூராட்சியில் புகார் அளித்து 4 நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதிரையில் தற்சமயம் டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பேரூராட்சியின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Close