மலேசியாவை உலுக்கிய மதர்சா தீ விபத்து! 25 மாணவர்கள் மரணம் (வீடியோ, படங்கள்)

கோலாலம்பூர் : மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மதரஸாவில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர்.

அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்புத்துறை இயக்குநர் கிருதீன் தர்மான் கூறியுள்ளார்.

தி தாருல் குரான் இட்டிஃபா எனும் மதர்சாவில், அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5.15 மணிக்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் உட்பட 25 பேர் பலியாயினர்.

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக் தீ விபத்து திடீரென ஏற்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Close