முத்துப்பேட்டை பிரில்லியண்ட் பள்ளியில் நடைபெற்ற புளூவேல் விழிப்புணர்வு நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புளுவெல் என்ற இணையதள விளையாட்டை பற்றியும் அதன் விபரீத விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பள்ளியின் தாளாளர் A.முகமது யாகூப்  தலைமை தாங்கி தலைமையுரை வழங்கினார். அத்துடன் முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் சிறப்புரை ஆற்றினார். மேலும் பள்ளியின் இளைய தாளாளர் A.M. அமானுல்லா அவர்கள், இரு சக்கர மோட்டார் வாகனத்தை மாணவர்கள் மிக வேகமாக ஓட்டுவதினால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி கருத்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். பள்ளியின் முதல்வர் நன்றி கூற தேசியகீதத்துடன் கருத்தறங்கு இனிதே முடிந்தது.

Close