பெங்களூரில் அசத்திய அதிரை மாணவர்கள் (படங்கள்)

கர்நாடக தலைநகர் பெங்களூரில் அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அதிரை மாணவர்கள் அங்கு நடைபெற்ற கைப்பந்து தொடர் ஒன்றில் கலந்துகொண்டனர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிரை மாணவர்கள் அணி லீக் மற்றும் காலிறுதி சுற்றுக்களில் வெற்றிபெற்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அதிரை அணி போராடி தோல்வியை தழுவியது.

அதிரை மாணவர்கள் இதுபோல் மென்மேலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்

Close