அதிரை காதிர் முஹைதீன் பள்ளியில் ரோட்டரி சங்கம் நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் (படங்கள் இணைப்பு)

இன்று காலை 18/09/2017 அன்று அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு வழங்கும் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

இம்முகாமை ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம்,செயலாளர் T.நவாஸ் கான், பொருளாளர், Z.அகமது மன்சூர் தொடங்கி வைத்தனர். காதிர்முகைதீன் ஆண்கள் பள்ளியின் தலைமையாசிரியர் அஸ்ரப்,தமிழாசிரியர், அஜ்முதீன் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளர் பேராசிரியர்.செய்யது அகமது கபீர் அவர்கள் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏன் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி சிறப்பு உரையாற்றினார்கள்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் திரு.வைரவன், திரு.உதயகுமார், திரு.அய்யாவு, ஹாஜாபகுருதீன், வெங்கடேஸ், சாகுல் ஹமீது,நூருல் அமீன்,ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் முடிவில் ரோட்டரி சங்க நிர்வாகியும், காதிர்முகைதீன் கல்லூரி ட்ரஸ்ட்டி முகமது தமீம் அவ்ர்கள் நன்றி உரை ஆற்றினார்.

Close