அதிரை நெசவுத்தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் டெங்கு பாதிப்பு! குப்பைகளால் நேர்ந்த சோகம் (படங்கள் இணைப்பு)

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலில் பாதிக்கபட்டவர்கள் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 3 நாட்களுக்கு முன்பாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அதிரையை சேர்ந்த பள்ளி மாணவர் வாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெருகி வரும் கொசுக்களினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இக்காய்ச்சல் விஷக் காய்ச்சலாக மாறி டெங்கு காய்ச்சலாக பரவி வருகிறது. இதனையடுத்து அதிரையில் பல்வேறு அமைப்புக்கள் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அதிரை நெசவுத்தெரு பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அடுத்தடுத்த வீடுகளில் 7 பேர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் பல நாட்களாக அல்லப்படாமல் இருக்கும் குப்பையால் தான் என்கின்றனர் அப்பகுதி மக்கள். இந்த குப்பைகளில் தண்ணீர் தேங்குவதால் உற்பத்தியாகும் எடிஸ் வகை கொசுக்களின் தொல்லை இப்பகுதியில் அதிகமாக உள்ளதாகவும் குப்பைகளை அல்ல பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Close