அதிரையில் டெங்கு காய்ச்சல் குறித்து சமூக நலக்கூட்டியக்கத்தின் அவசரக்கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினத்தில் இயங்கி வரும் அதிரை சமூக நலக் கூட்டியக்கத்தின் சார்பாக. ஜனாப்.அப்துல் மாலிக் அவர்களின் தலைமையில் நேற்று 18/09/2017 மாலை 5 மணிக்கு சாரா திருமண மண்டபத்தில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைப் பெற்றது.

இதில் 21 வார்டின் முக்கியஸ்தர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டனர். அதிரைக்கு முக்கியமாக தேவையான அரசு மதுத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும்,தீயணைப்பு நிலையமும்,பொது சுகாதாரம் போன்ற விசயங்களை வலியுறுத்தி தீர்மானமும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இவைகள் சம்பந்தமாக கோரிக்கை மனு கொடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. திரு பொன்னபழம் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

Close