அதிரை கரையூர் தெருவில் ரோட்டரி சங்கம் நடத்திய நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக இன்று 20/09/201 கரையூர் தெரு ஆர்ச் அருகில் பொது மக்களுக்கு நிலவேம்பு குடி நீர் வழங்கப்பட்டது. இதில் 500 மேற்பட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் பயன் பெற்றனர். இம் முகாமை ரோட்டரி சங்க தலைவர் R.ஆறுமுகம், செயலாளர், T.நவாஸ் கான், பொருளாளர் Z.அகமது மன்சூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் சாசனத்தலைவர் M.உதயகுமார், முன்னாள் தலைவர் M.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் வைரவன், ஹாஜா பகுருதீன் தலைமை தாங்கினர். உறுப்பினர்கள் திரு.அய்யாவு, சாகுல் ஹமீது, M.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Close