அதிரையின் பல பகுதிகளில் சுற்றுசூழல் மன்றம் சார்பாக நிலவேம்பு கசாயம் விநியோகம் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பாக இன்று காலை அதிராம்பட்டினம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு கஷாயம் சி.எம்.பி.லைன் ஹனிப் பள்ளிவாசல் அருகில் தயாரிக்கப்பட்டது.

ஷிபா மருத்துவமனைபின்புரம் , சேர்மன்வாடி, பழஞ்செட்டிதெரு, பழைய போஸ்ட்ஆபிஸ்,ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது. தலைவர் வ.விவேகானந்தம், செயலர் எம்.எப்.முஹம்மது சலீம், துணை செயலர் கே.இத்ரீஸ் மரைக்கா பொருளாளர்.எம்.முத்துக்குமரன்
செயற்குழு உறுப்பினர் எஸ்.அஹமது அனஸ் தணிக்கையாளர்.என்.ஷேக்தம்பி மக்கள் தொடர்பாளர் அ.கண்ணன் உறுப்பினர்கள்டி.முஹம்மது நவாஸ்கான், ஏ.முஹம்மது சைபுதீன்
தூய்மைதூதுவர்கமாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர்.
பின்னர் தலைவர்.வ.விவேகானந்தம் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஏ.கண்ணன் பேரூராட்சி பகுதியில் டெங்குபாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்

Close