அதிரை – பட்டுக்கோட்டை இடையே இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள அகல ரயில்பாதை அமைக்கும் பணி (படங்கள் இணைப்பு)

அதிரை, பட்டுக்கோட்டை சுற்றுவட்டார மக்களின் நீண்ட நாள் கனவான அகல ரயில் பாதை திட்டம் இன்னும் சில மாதங்களில் நனவாக உள்ளது. அதற்கு உண்டான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பட்டுக்கோட்டை முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் ஏராளமான சிறிய மற்றும் பெரிய ரயில் பாலங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. பட்டுக்கோட்டையில் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரயில்நிலைய புணரமைப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதிரையிலும் அகல ரயில்பாதைக்கான தண்டவாள கம்பிகள் வரவழைக்கப்பட்டு. ரயில் பாதையை மேடாக்குவதற்காக தற்பொழுது ஜல்லி மற்றும் செம்மண் அடிக்கப்பட்டு தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்குக் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

Close