அதிரையில் வீணாகி வரும் ஈடில்லா செல்வம்!

அதிரை சுரைக்காய் கொள்ளை பகுதியில் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள பேரூராட்சியின் தண்ணீர் குழாய் கடந்த பல நாட்களாக பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் விணாக சாலையோரங்களில் ஓடி வருகிறது. இந்த தண்ணீர் அப்பகுதியின் தேங்குவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட நோய்கள் வருவதற்குறிய வாய்ப்புகள் உள்ளன.

கடந்த சில மாதங்களாக அதிரை உட்பட தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தண்ணீருக்காக அவதிப்படும் நிலையில் அதிரை பேரூராட்சியின் இந்த அலெட்சியப்போக்கால் தண்ணீர் வீணாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Close