அதிரையில் அப்பாவிகளின் பாவத்தை சம்பாதிக்கும் போலி விசா ஏஜெண்டுகள்!

தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஊர்களில் அதிரையும் ஒன்று. நமதூரின் பழக்க வழக்கங்கள், பேச்சு,உணவு இவைகளில் ஒரு தனித்துவமிக்க பெயரை பெற்றதுபோல அதிகமான விசா ஏஜெண்ட்கள்(?) இருக்கும் இடமாகும் அதிரை அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் அந்த பெயரும் நமதூருக்கு இருக்கிறது.

இன்றைய சூழ்நிலையில் எளிதில் அதிகமாக பணம் சம்பாதித்து விடலாம் என்ற ஆசையில் எந்தவித அனுபவமும்,இல்லாமல் நமதூரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை தெருவிற்கு தெரு விதமாக வெளிநாடுகளில் வேலை வாங்கி தரும் விசா ஏஜெண்ட்களாக பலர் உருவாகிவிட்டனர்.

அதிலும் குறிப்பாக இந்து சகோதரர்களிடம் கூறும் பொழுது துபாய்,சவுதி,கத்தார்,மலேசியா,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை வாங்கி தருவோம் என்ற ஆசையை தூண்டி விடுகின்றனர்.அதேப்போல் முஸ்லீம் சகோதரர்களிடம் கூறும் போது கனடா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா,ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகளை சொல்லி அங்கு இப்படி இருக்கும் எளிதில் சம்பாதித்து விடலாம் என்ற ஆசையை காட்டி அட்வான்சாகவும்,மொத்தமாகவும் கொடுத்து ஏமாற்றும் ஏஜெண்ட்களிடம் மாட்டிக்கொள்கின்றனர் அப்பாவி இளைஞர்கள்.

நமதூரின் சில மோசடி ஏஜெண்ட்களிடம் ஏமாந்த பல வெளியூர்காரர்கள் கடுமையான மன உளைச்சல், அவஸ்தை, வீட்டில் இழிசொற்களுக்கு ஆளாகுதல் போன்ற நெருடலுக்குள்ளான பலர் இன்றும் தன்னுடைய ஆதங்கத்தை சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றனர்….

விசா ஏஜெண்ட்கள் பற்றியான தெளிவுக்கு பிறகு நல்ல நபரா,இதற்கு முன் எந்தவித சிக்கலும் இல்லாமல் ஆள் அனுப்புகிறாரா? விசா வந்த பிறகு பணம் தருவேன் என்று முன்கூட்டியே விசாரித்த பிறகு அனுகவும்….

போலிகளை தவிர்ப்போம்!!
மோசடியாளர்களை அடையாளப்படுத்துவோம்!!

ஆக்கம்: முஹம்மது அஜாருத்தீன்

Close