அதிரை சுற்றுசூழல் மன்றம் மற்றும் SISYA சார்பாக 11 இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் (படங்கள் இணைப்பு)

டெங்கு காய்ச்சல் பாதுகாப்பிலிருந்து நம் சமூகம் நமது நலன் என்ற அடிப்படையில் 17/09/2017 ஞாயிறு அன்று ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு மூலம் CMP லைனில் மருத்துவ முகாம் மற்றும் கசாயமும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இன்று 20/09/2017 புதன் கிழமையும் இதனையும் தொடர்ந்து இன்று 22/09/2017 வெள்ளிக் கிழமை அதிரை சுற்று சூழல் மன்றம் 90.4 சார்பாக ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு உதவியோடு நில வேம்பு கசாயாம் வினியோகிப்பதற்க்கு ஹனீப் பள்ளி அருகாமையில் 200 லிட்டர் சுத்தகரிக்கப்பட்ட 10 பாட்டில் தண்ணீரில் 3 கிலோ நில வேம்பு மூலிகை காசாயம் காய்ச்சப்பட்டது.

கசாயம் தயாரிப்பாளர்கள்:

சேக்தம்பி, அனஸ், சலீம், இத்ரீஸ்.சுஹைப்

வினியோக செய்யப்படும் இடங்கள்.

1.சேர்மன் வாடி கட்டிட தொழிளாலர்கள்.
2.பேருந்து நிலையம்.
3.தக்வா பள்ளி முக்கம்.
4.பிலால் நகர்.
5.கரையூர் தெரு.
6.நெசவுக்காரத் தெரு பூனாச்சி கடை அருகில்.
7.முத்தாம்மாள் தெரு.
8.கடற்கரை தெரு.
9.ஹாஜா நகர்.
10. ஹயாத் ஹோட்டல் அருகில் (புதுத் தெரு.
11.வாய்க்கால் தெரு ரஹ்மானியா பள்ளி அருகில்.

மொத்தம் 2500 பேப்பர் கப் கொண்டு வினியோகம் செய்யப்படுகிறது.

அனைவரும் கசாயத்தை அருந்தி பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு.

சுற்று சூழல் மன்றம் 90.4 மற்றும்
ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு.

Close