அதிரை CMP லேனில் அதிகரிக்கும் டெங்கு நோயாளிகள்… CMP வாய்க்கால் தான் காரணமா..?

அதிராம்பட்டினத்தில் டெங்கு நோய் அதிகமானவர்களை தாக்கியுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பதற்காக பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் தன் ஆர்வலர்கள் பல தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்கள்.

இந்த நடவடிக்கைகளில் பொதுமக்களாகிய நமக்கும் சில கடமைகள் உள்ளன. கீழே உள்ள படம் C M P லைன் V K M ஸடோரில் இருந்து CMP மெடிக்கல் வரை உள்ள CMP வாய்காலின் நிலை.

இந்த வாய்காலில் தங்கள் வீட்டின் கழிவு நீரை வெளியேற்றி பொதுமக்களுக்கு நோயை பரப்புகிறோம் என்ற எந்த உறுத்தலும் இல்லாமல் இதை செய்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து வீடு கட்டுபவர்கள் பொதுமக்களுக்கு பயன்படும் வாய்காலில் கழிவு நீரை விடுவதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றனர். கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிவருகின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட தெருவாசிகள் மற்றும் முஹல்லா நிர்வாகிகள் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

Close