அதிரை மக்களே ஏமாறாதீர்கள்!

இன்றைய அரசியல் என்பது சாக்கடை போல என்பதை நிருபித்துக் கொண்டுருக்கின்றனர் பல அரசியல் வாதிகள். சமுக ஆர்வலர் என்று அடையாளப்படுத்திக் கொண்டு அரசியலில் நிழையும் சிலர் கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசி பொதுமக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெறுகின்றனர்.

பின்னர் மக்களின் பாடு திண்டாட்டமாகி விடுகின்றது. ஆட்சிக்கு வந்த முதல் ஒரு சில மாதங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக பாசாங்கு காட்டி விட்டு அடுத்த சில வருடங்கள் தன்னை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களின் நிலையை திண்டாட்டமாக்கி விட்டு தங்களின் கொண்டாட்டத்தில் இறங்கி விடுகின்றனர்.

இந்த காலக்கட்டத்தில் ஊரின் சுகாதாரத்தில் அக்கரை கொள்ளாமல், மக்களின் நலனில் அக்கரை காட்டாமல் தான் ஒரு ஆட்சியாளர் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு ஆட்சியாளர் என்ன செய்யவேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். பெயருக்காகவும் பெருமைக்காகவும் அரசியலுக்கு வரும் இது போன்றவர்களை அரசியலில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். இது போன்ற இழிவு குணம் கொண்டவர்கள் பல திறமையானவர்களும் பொதுச் சேவையில் ஆர்வம் கொண்டவர்களும் ஆட்சிக்கு வர வாய்ப்பற்றவர்களாகி விடுகின்றனர்.

சுயநலவாதிகளிடமும், சந்தர்பவாதிகளிடமும், சமுக விரோதிகளிடமும் இந்த அரசியலும், ஆட்சியும் சிக்கிக்கொண்டு சின்னாப் பின்னமாகி விட்டது. இதன் விளைவு தான் நம்நாடும் அதன் மக்களும் இன்னும் முன்னேராமல் இருப்பதற்க்கு காரணம். இது போன்ற அரசியல் வியாதிகளால் தான் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வருகின்றது.

மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தும் பலர் காசுக்கும் பெருமைக்கும் மாறடிக்கும் ஊடகங்கங்களின் உதவியால் மக்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுகின்றனர். மக்களும் தங்களின் மீதுள்ள சமுதாய பொறுப்பை மறந்து அதிக பணம்  வழங்குபவர்களுக்கு தங்கள் வாக்குறிமையை விட்டுக் கொடுக்கின்றனர். இதில் ஓட்டுக்கு தரும் பணத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்ற விவாதம் வேறு. தேர்தல் நேரத்தில் 500 ரூபாய் வழங்கிவிட்டு ஆட்சி நெரத்தில் 50 கோடிக்கும் அதிகமாக அபேஷ் செய்யும் அரசியல் வாதிகள் இன்றைய காலக்கட்டத்தில் அதிகம் நிறைந்துள்ளனர்.

பதவியேற்று எந்த நல உதவியும் செய்யாமல் பிறரை குறை சொல்லியே காலம் கடத்திவிட்டு அடுத்த தேர்தல் வருவதற்க்கு சில மாதங்களுக்கு முன்பு ஏதாவது நன்மையை செய்தால் மக்களை ஏமாற்றி அடுத்த முறை ஆட்சிக்கு வரலாம் என்ற தேர்தல் வியூகத்தை தீட்டி பலர் தற்போது செயல்படுத்தி வருகின்றனர்.

அப்பாவி மக்களும் இறுதியில் இவர்கள் செய்த நல்லவற்றை வைத்து வாக்களித்து வெற்றி பெற செய்தால் இவர்கள் மீண்டும் “பழைய திருடி, கதவை திறடி” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் சகஜ நிலைக்கு மாறி விடுவார்கள்.

எந்த நிலையாக இருந்தாலும் மக்களின் பாடு திண்டாட்டம் தான். 2020 ல் இந்தியா வல்லரசு ஆகும் என்ற கணவு நம் நாட்டில் உள்ள அரசியல் வியாதிகளால் 2050 மாற்றப்படுமோ என்ற அச்சம் எழுகின்றது.

நமது நலன் கருதி காசுக்காக இல்லாமல் உண்மைக்காக உயர்வுக்காக வாக்களிக்க வேண்டும். பெயர் பெருவதற்க்காக அரசியல் பிழைப்பு நடத்துபவர்களை ஒதுக்க வேண்டும். நாட்டின் மீது அக்கரை கொண்ட சேவை மனம் படைத்த பலர் நம் நாட்டில் உள்ளனர். இவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

நம் ஓட்டு! நம் உரிமை! 
சிந்திப்போம்! செயல்படுவோம்!

-நூருல் இப்னு ஜஹபர் அலி


Advertisement

Close