Adirai pirai
islam sports இந்தியா

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீச்சல் வீரர் மெஹ்பூப் ஷம்ஷெர் கான் மரணம்!

இந்தியாவின் முதல் ஒலிம்பிக் நீச்சல் வீரர் மெஹ்பூப் ஷாம்ஷெர் கான் உ.பி. ரேபரேலி அருகிலுள்ள கெய்தபல்லே கிராமத்தில் நேற்று வஃபாத்தானார் அவருக்கு வயது 87.

1956ல் ஆஸ்திரேலியா மெல்போர்ன் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் 5 வது இடத்தைப் பிடித்த முதல் இந்திய நீச்சல் வீரர் இவர் ஆவார்.

கடந்த ஆறு தசாப்தங்களில், உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி வசதிகளை மேம்பட்ட பின்னரும், எந்த இந்திய நீச்சல் வீரரும் மெஹ்பூப் ஷாம்ஷெர் கானின் சாதனையை முறியடிக்கவில்லையாம். இருப்பினும் இந்திய அரசு இவருக்கு எந்த உதவியும் வழங்கவில்லை.

நீச்சல் போட்டியின் பல்வேறு பிரிவுகளில் பல சாதனைகளை கான் நிகழ்த்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.