உங்களை அசர வைக்கும் அதிரை பிறையின் புதிய வசதிகள்..!

அதிரை பிறை இணையதளம் 6-ம் ஆண்டில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதிரையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் உண்மை தண்மை மாறாமல் அளித்துக் கொண்டிருக்கிறோம். துடிப்பான இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்படுகிறது. 05 வருடங்களில் இதுவரை 10 ஆயிரம் செய்திகளை நெருங்கவுள்ளோம்.

வெறும் செய்திகளை மட்டும் தராமல் உள்ளூர் நிகழ்வுகள், மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவிலான நிகழ்வுகள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி அறிவுரைகள், பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள், அதிரை புகார்கள், அயல் நாட்டில் வாழும் அதிரையர்களின் நிகழ்வுகள், மருத்துவ குறிப்புகள், விளையாட்டு செய்திகள் போன்ற பல்சுவை தகவல்களை உடனுக்குடன் தந்து சென்ற ஆண்டுகளை விட இந்த வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றுள்ளது.

இதையடுத்து மக்களுக்கு பயனுள்ள வகையில், அதிக தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒரு ப்ரொஃபசனல் செய்தி தளமாக வடிவமைக்கப்பட்டுள்ள நமது தளத்தின் தொழில்நுட்ப மேம்பாடு காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தற்போது நமது தளத்தை பயன்படுத்தும் வாசகர்கள் நமது தளத்தின் மூலமாகவே செய்திகளை அனுப்பவும், வாட்ஸ் அப், பேஸ்புக், மொபைல், ஈ-மெயில், எஸ்.எம்.எஸ் மூலமாக நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கீழே உள்ள படங்களை போல மொபைல் மற்றும் கணினியில் உள்ள மெசேஜ் பட்டனை கிளிக் செய்து பயனடையலாம்…

மேலும் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை நாம் வழங்க உள்ளோம். இதனை அனைவரும் பயன்படுத்தி மேம்மேலும் ஆதரவளிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

செல்: 9597773359, மெயில்: adiraipirai@gmail.com, பேஸ்புக்: facebook.com/adiraipiraibook, ட்விட்டர்: twitter.com/adiraipirai

Close