“கஃபா”வுக்குள்ளே என்ன இருக்கிறது…?

“கஃபா” (மெக்கா) என்னும் செவ்வகமான கட்டிடத்துக்கு உள்ளே ஏதோ சிலைகள் இருப்பதாக மாற்று மத சகோதரர்கள் நினைத்து கொண்டு இருக்கின்றனர் பலர்.. “கஃபா” என்னும் கட்டிடம் தொழுகை நடத்துவதற்காக முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால்
கட்டப்பட்டது. அது சிதிலமடைத்ததால், அதன் பின்
இப்ராஹீம் (அலை) அவர்களால் மறு நிர்மாணம் செய்யப்பட்டது. அவர்களெல்லாம் அக்கட்டிடத்திற்குள்ளேயே தொழுதார்கள். நமது நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எப்படி தூய்மையான இடமாக உள்ளதோ அது போன்றே தூய இடம் மட்டும் தான் உள்ளே இருக்கிறது.
 எல்லா பள்ளி வாசல்களிலும் எப்படி எந்தச் சிலையும், வழிபாட்டுச் சின்னமும் இல்லாமல் உள்ளேதா, அது போன்றே வெற்றிடம் தான் கஃபாவுக்கு உள்ளேயும் இருக்கிறது…. தொழக்கூடிய மக்கள் தொகை பல கோடி மடங்கு பெருகி விட்ட நிலையில், அதனுள்ளே போய் தொழமுடியாது என்பதால் தான், உள்ளே யாரும் இப்போது அனுமதிக்கப்படுவதில்லை.. 
“கஃபா”வுக்குள்ளே நான்கு சுற்று சுவர்களும், 3 தூண்களும் தவிர வேறு எதுவுமே இல்லை என்பதே உண்மை…
Close