அதிரை கடற்கரை வழியாக 7.5 கிலோ தங்கம் கடத்திய மூவர் கைது…!

 சமீபத்தில் வேதாரண்யம் பகுதியில் 2 மர்ம படகும் கடலூர் பகுதியில் 1 படகும் முத்துப்பேட்டை பகுதியில் 1 படகும் ஒதுங்கியது. அதனால் சுங்க இலகா அதிகாரிகளுடன் மத்திய கடத்தல் பரிவு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதில் ஏற்கனவே 55 கிலோவுக்கு மேல் தங்கம் கடத்தல் காரரிடமிருந்து பறிமுதல் செய்தனர். 
இந்த நிலையில தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணம் கடற்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அதனால் கோவையில் இயங்கும் மத்திய வருவாய் புலணாய்வு நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தவகல்; கிடைத்து அதிகரிகள் முத்துப்பேட்டை அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் பகுதியில் சுங்க இலகா அதிகாரகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு நுண்ணறிவு துறை அதிகாரிகள் ஒரு டீம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் சென்ற 2 டூவீலர்களை மடக்கி பிடித்தனர். அதில் 3 பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து 7.6 கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கபட்பது. அதன் மதிப்பு 2.34 கோடியாகும். மேலும் பிடிபட்டவர்கள் 1.தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன(23) 2. புதுக்கோட்டை மாவட்டம், மும்பாளைபட்டிணம் கிராமத்தைச் சேர்ந்த காதர் முகைதீன்(55) 3.அதே ஊரைச் சேர்ந்த இப்ராகிம்(50) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்து முத்துப்பேட்டை சுங்க இலகா அலுவலம் கொண்டு வந்தனர்.
சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். பின்னர் மேலும் விசாரணைக்காக முத்துப்பேட்டை சுங்க அலுவலகத்தில் 3 பேரையும் வைக்கப்பட்டனர். கடத்தப்பட்ட தங்கம் எங்கிருந்து வந்தது? இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதா மேலும் கடலோர மாவட்டத்தில் சமீபத்தில் 5 படகுகள் கரை ஒதுங்கிய நிலையில் அந்த நாட்களில் அடுத்தடுத்து தங்கம் கடத்தப்படுவது பறிமுதல் செய்யப்படுவதால் இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் நேற்று இரவு 3 பேரிடமும் முழு விசாரணை முடித்துதிருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
1. கடத்தல்காரர்கள் விசாரணைக்காக வைக்கபடடுள்ள முத்துப்பேட்டை சுங்கஇலாகா அலவலகம்.
2. கடத்தல்காரர்கள் பயன்படுத்திய டூவிலர்கள்.
3 திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்திய படம்.
Close