பதிவுகள்

அதிரை கடற்கரையில் 7 1/2 கிலோ தங்கத்துடன் கரை ஒதுங்கிய மர்ம படகு..!

தஞ்சை அருகே இலங்கை படகில் வந்த மர்ம நபர்கள் யார்? - போலீசார் விசாரணைதஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள ஏழரை கிலோ தங்கத்தை, மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் 2 தினங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத படகு ஒன்று கரை ஒதுங்கியது. இதையடுத்து கோவையில் இயங்கும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர்.
பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் சோதனை நடத்திய போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் அங்கு சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் இருந்த 3 பேரிடம் ஏழரைக் கிலோ தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கம் கடல் வழியாக கடத்தப்பட்டு, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் அவர்களிடம் விசாரணை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறைனர், அவர்களை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Show More

Related Articles

Close