நம்ம ஊரு நாறிப் போச்சு…!


நம் ஊரில் அன்மைக் காலமாக செட்டியாக்குளம் மற்றும் செய்னா குளம் ஆகிய இரண்டு குளங்களும் தூர்வாரப் பட்டுக்கொண்டிருக்கும் செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. இது போன்று முக்கிய நீர் ஆதாரங்களான குளங்களை துப்பரவு செய்வது
பாராட்டுக்குறியதே. ஆனால் இவை துப்பரவு செய்யப்படுவதினால் குளங்கள் சுத்தமடைந்தாலும் நமது ஊர் சாலைகள் பழுதடைந்து அந்த பகுதிகளில் செல்வதற்க்கே அருவருப்பாக உள்ளது. 

இந்த குளங்களில் இருந்து தூர்வாரப்படும் சகதி கழிவுகளை ட்ராக்டர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு பல இடங்களில் சிறிது சிறிதாக கொட்டப்படுகிறது. சகதியை ஒரு சரக்கு பெட்டகம் (Container) முழுவதுமாக நிரப்பிக்கொண்டு சென்றால் கால் பங்குதான் கழிவுகள் கொட்ட வேண்டிய இடத்தில் கொட்டப்படுகிறது மீதம் முக்கால் வாசி கழிவுகள் செல்லும் வழியில் சாலைகளில் தான் விழுகிறது. 

 செட்டியா குளத்தில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் வாய்க்கால் தெரு, கிட்டங்கி தெரு, தட்டாரத் தெரு சாலை, சேர்மன் வாடி சாலை, மெயின் ரோடு, பழஞ்செட்டித் தெரு சாலை வழியாக எடுத்து சென்று கொட்டப்படுகிறது. இதனால் ஆரம்ப நிலையிலேயே வாய்க்கால் தெரு சாலை முற்றிலுமாக சகதியால் சூழப்பட்டு பழுதடைந்த நிலையில், அதை தொடர்ந்து தற்போது மேற்க்கூறிய பிற பகுதி சாலைகளும் சகதியால் சூழப்பட்டு மாசடைந்து வருகிறது. 

வாய்க்கால் தெரு, சேர்மன் வாடி, கிட்டங்கித் தெரு சாலை வழியாக சென்றால் ஒரே புழுதியாக உள்ளது வாகனங்கள் ஓட்ட முடியவில்லை என்று வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் குறை கூறுகின்றனர். மேலும் இந்த சாலைகளில் விழுவது அசுத்தமான சகதிகள் என்பதால் இந்த பகுதிகளில் கொசுக்களின் ராஜ்ஜியம் குடி கொண்டுள்ளது. 

மீண்டும் கூறுகிறோம் குளத்தை தூர்வாருவது என்பது பாராட்டிற்க்குரிய செயல்தான் ஆனால் ஒரு பகுதி சுத்தமாகுவதற்க்காக பிற பகுதிகளை அசுத்தம் செய்வது வருந்தத்தக்கது. இதற்க்கு பேரூராட்சி நிர்வாகம் சரியான தீர்வு காண வேண்டுகிறோம்.

                               

Close