மாலை பொழுதை மகிழ்வுடன் கழிக்க புதுப்பட்டினம் கடற்கரை! (அழகிய படங்களுடன் ஒரு பார்வை)

அதிரை அருகே சில கிலோ மீட்டர் தூரத்தில் கிலக்கு கடற்கரை சாலையை ஒட்டியு அமைந்துள்ள அழகிய கடற்கரை கிராமம் புதுப்பட்டினம். அதிரைக்கு அருகாமையில் உள்ள மல்லிப்பட்டனம் கடற்கரை, அலையாத்தி காடு கடற்கரை, போன்று புதுப்பட்டினம் ஊராட்சியின் எல்லைக்குள் இரண்டு கடற்கரைகள் உள்ளன. ஒன்று வெளிவயல் கடற்கரை மற்றும் புதுப்பட்டினம் கடற்கரை. புதுப்பட்டினம் பள்ளிவாசல் சாலை வழியாக நேராக சென்றால் இந்த கடற்கரைக்கு செல்லலாம்.

சில தூரம் வரையிலும் ஆழம் குறைவான இந்த கடற்கரையில் வந்து மகிழலாம். மாலை நேரத்தில் பொழுது போக்குக்காக நமதூருக்கு மிக அருகில் உள்ள இங்கு வரலாம். இருப்பினும் இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் வருகையின்றி காட்சியளிக்கிறது.அரசாங்கம் இந்த கடற்கரையை சுற்றுல்லா தளமாக அமைத்து போதிய வசதிகளை ஏற்படுத்தினால் இதுவும் மக்கள் கூடும் ஒரு முக்கிய கடற்கரையாக மாறும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

செய்தி மற்றும் படங்கள்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close