அதிரை சாணாவயலில் நடைப்பெற்ற திடல் தொழுகைக்கு திரண்ட மக்கள் வெள்ளம் (புகைப்படங்கள்)

இன்று தியாக திருநாளாம் ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு அதிரை மேலத்தெரு, சாணாவயலில் நடைபெற்ற ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகையில் அதிரையின் பல பகுதிகளில் இருந்தும் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி சென்றனர். சரியாக காலை 7:45 மணிக்கு பெருநாள் தொழுகை துவங்கப்பட்டது. தொழுகைக்கு பின்னர் பயான் உரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு மக்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் கட்டித்தழுவி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இங்கு பெண்களும் தொழுவதற்க்கு வசதியாக தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Close