மணல் சாலைகளாக உருமாறி வரும் அதிரையின் தார் சாலைகள் (மறுபதிப்பு)

adiraipirai.com

நமதூரின் பிரதான சாலைகளாக கருதப்படும் அதிரை மெயின் ரோடு முதல் அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு,புதுத்தெரு,கடைத்தெரு சாலைகள் பழுதாகி மணல் சூழ்ந்து காணப்படுகின்றது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துடன் இந்த சாலைகளை கடந்து செல்ல


வேண்டியுள்ளது.மேலும் சாலைகள் மணல் பரந்து காணப்படுவதால்
மோட்டார் பைக்குகளில் செல்பவர்கள் பள்ளி முடிந்து வீட்டிக்கு திரும்பும் மாணவர்கள் சருக்கி கீழே விழுந்து வருகின்றனர்.இந்த பகுதிகளில் புதிய சாலை அமைப்பு பணி “வரும்,ஆனா வராது” என்ற கதை போல் உள்ளது.எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய சாலை அமைப்புப் பணியை துரிதமாக முடிக்க பொதுமக்களின் சார்பில் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறொம்,மேலும் முதற்க்கட்டமாக இந்த சாலைகளில் மேல் சூழ்ந்துள்ள மணலை அப்புரப்படுத்துமாரு வேண்டுகிறொம்.
அதிரை புதுத்தெரு சாலை

அதிரை C.M.P LANE சாலை

அதிரை பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை

                   

Close