வத்தி வைக்கும் வாட்ஸப் வதந்தீ!!!!!!!!!!

எத்தி வைக்கும் செய்திகளை

எளிதாக்க  உதவினாலும்
வத்தி வைக்கும்
வதந்தித்  தீயெ அதிகம்!

உண்மைகள் வீட்டிற்கு
உள்ளே வருவதற்குள்
பொய்மைகள் வாட்ஸப்பில்
புறப்பட்டும்  பாரெங்கும்!

நிழற்படங்கள் யாவும்
நிச்சயமாய்ப்  பிழைகள்
உழலவைக்கும் மனங்களை
உலைவைக்கும் குடும்பங்களை!

நாளும் செய்திகளை
நலமாய்ப் பதிவோம்
ஆளும் அறிவியலின்
ஆற்றலை மதிப்போம்!


“கவியன்பன்” கலாம், அபுதாபி

Close