பதிவுகள்

முதல் நாள் புஹாரி ஷரீஃப் நிகழ்ச்சி, அதிரை ஜாவியாவுக்கு திரளாக வருகை தந்த மக்கள்

இன்று நமதூர் ஜாவியாவில் புஹாரி ஷரிப் நிகழ்ச்சி முந்தைய வருடங்களைப் போன்று இந்த வருடமும் மிகவும் சிறப்புடன் துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ருடன் துவங்கப்பட்டது. பின்னர் புகாரி ஷரீப் ஓதப்பட்டது அதன் பிறகு அதிரை ரஹ்மானியா மதர்சாவின் பேராசிரியர்ஜனாப்.முஹம்மது குட்டி ஆலிம் அவர்களால் மார்க்க சொற்பொழிவாற்றப்பட்டு ஜனாப்.அப்துல் காதர் ஆலிம் அவர்களின் துஆ வுக்குப் பிறகு தப்ரூக் வழங்கி நிறைவு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் சிறுவர்கல் கலந்துக்கோண்டனர். மேலும் இந்த பயானை கேட்க அருகில் உள்ள வீடுகளில் பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெண்கள் பலர் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
இந்த மஜ்லிஸ் இன்ஷா அல்லாஹ் இன்னும் நாற்பது நாட்கள் தொடர்ந்து நடைப்பெறும், அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுங்கள்.

Show More

Related Articles

Close