அதிரை அருகே சாலை விபத்து! அதிரை சிறுவர்கள் படுகாயம்!

அதிரை முத்தம்மாள் தெருவை சேர்ந்தவர்கள் தாயாளன்(16) மற்றும் சுவின்(16). இவர்கள் இருவரும் அதிரை அருகே உள்ள மகிழங்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் மாடு குறுக்கே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பும் போது எதிர்பாரத விதமாக கிழே விழுந்தனர். இதில் காயமடைந்த இருவரும் வேகமாக மீட்கப்பட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஓட்டுனர் உரிமம் பெறாமல் சிறுவர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவதால் அதிரையில் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Close