சவூதியில் அதிகரிக்கும் மோசடிகள்! எச்சரிக்கை பதிவு!

எனக்கு நேற்று  ஒரு போன் கால் வந்தது, (தொலைபேசி என் இல்லை)

நீங்க வைத்திருக்கும் இந்த நம்பருக்கு 2 மில்லியன் சவூதி ரியால் லாட்டிரி விழுந்துருக்கு என்று சந்தோசமா சொன்னான். ( ஹிந்தியில்)

நான் ஹ்ம்ம் போலோ ( சொல்லுங்க) அப்படின்னு மேலும் கேட்டேன், உங்க நம்பருக்கு எங்க மொபில் நெட்வொர்க்கில் இருந்து ஒரு நம்பர் அனுப்புவோம் அதை உங்க பேட்டரியை கழற்றி சிம்மில் இருக்கும் சிப் நம்பர் இணைத்து ஒரு மெசேஜ் அனுப்ப சொன்னாங்க

நான் எதுக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டேன் , அதை அனுப்பினால் தான் இந்த மில்லியன் கிடைக்கும் சொன்னங்க smile emoticon

எதுக்கு சார் உங்களுக்கு அந்த நம்பர் வேண்டும், நேரடியாக எனது ஆபிசுக்கு வந்து என் சிம்மை நீங்களே வைத்து ஒரு மில்லியன் ரியாலை கமிசனாக எடுத்து மீதி இருக்கும் ஒரு மில்லியனை தாங்க என்றேன் smile emoticon

இரண்டு கெட்டவார்த்தை பேசி வைத்து விட்டான் smile emoticon

——————————————–
குறிப்பு : 
இதை போல் நாம் செய்தால் நாம் செய்யும் ரீசார்ஜ் அனைத்தும் திருடப்படும், ஏற்கனவே சவுதியில் ஒரு மாதத்தில் இரண்டு வெடிகுண்டு வெடித்து உள்ளது, அவர்கள் உங்கள் மொபில் என்னை தவறான முறையில் கூட பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை!
தகவல்  : யூசுப் ரியாஜ் . சவூதி

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close