மழைக் காலத்தில் மின் விபத்துகளை தவிர்ப்பது எப்படி?

 • அறுந்து தரையில் விழுந்து கிடக்கும் மேல்நிலை மின் கம்பிகளை மக்கள் தொடாமல், உடனடியாக தங்களுடைய பகுதி மின்வாரிய அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
   • மின் மாற்றிகள், மின் கம்பகங்கள், மின் பகிர்வுப் பெட்டிகளின் ஸ்டே வயர்கள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
    • மின் கசிவு தடுப்பான் கருவியை வீடுகளில் பொருத்தி மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கலாம்.
     • ஈரமான கைகளுடன் சுவிட்சுகளை இயக்கக் கூடாது.
     • மின் கம்பத்திலோ அல்லது அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது.
      • குளிர்சாதனப் பெட்டி, கிரைண்டர் போன்றவற்றிற்கு நில இணைப்புடன் கூடிய மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகள் மூலமாக மட்டுமே மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
       • மின்கம்பத்திலோ, அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களிலோ கொடி, கயிறு உள்ளிட்டவை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
        • இடி, மின்னலின்போது மின் கம்பிகள், மரங்கள், உலோக கம்பிவேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதிகளை தேர்ந்தெடுக்கலாம்.
         • அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் மின் கருவிகளின் சுவிட்சுகள் இருப்பிடம் அமைய வேண்டும்.
          • இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து விபத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.
           • மக்கள், தங்களது பகுதியில் மின்தடை, மின்சார பொருள்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்களது பகுதிக்கு உள்பட்ட பிரிவு அலுவலர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்
           Close