முகம்மது அலி ஜின்னாவின் மகள் தினா வாடியா மரணம்!

பாகிஸ்தான் தந்தை முகம்மது அலி ஜின்னாவின் ஒரே மகளான தினா வாடியா தனது 98வது வயதில் நியூயார்க்கில் மரணமடைந்தார்.

98 வயதாகும் தினா வாடியா, ஜின்னாவின் ஒரே மகள் ஆவார். நியூயார்க்கில் வசித்து வந்த தினா அங்கு மரணமடைந்துள்ளார். தினா வாடியாவின் மகன்தான் பிரபல வாடியா குழுமத் தலைவர் நுஸ்லி வாடியா ஆவார். இவர் தவிர டயானா வாடியா என்ற மகள் உள்ளார்.

இவர்கள் தவிர நெஸ் மற்றும் ஜெ வாடியா என்ற இரு பேரப் பிள்ளைகளும் அவருக்கு உள்ளனர்.

பாகிஸ்தான் குடியுரிமையை மறுத்து விட்டு இந்தியராக வாழ்ந்தவர் தினா வாடியா என்பது குறிப்பிடத்தக்கது.

Close