மதுக்கூர் மைதீன் கொலையில் தொடர்புடைய இருவர் SDPI கட்சியிலிருந்து நீக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் மைதீன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுக்கூரை நேர்ந்த ஷேக் அப்துல்லா, ரியாவுத்தீன் உள்ளிட்டோர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து SDPI கட்சியின் மாநில பொதுசெயலாளர் நிஜாம் முகைதீன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகரத்தை சேர்ந்த எஸ்டிபிஐ. கட்சியின் உறுப்பினர்களான ரியாவுதீன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகிய இருவரும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அடிப்படை #உறுப்பினரிலிருந்து_நீக்கம் செய்யப்படுகிறார்கள். இந்த இருவரிடமும் கட்சி சம்பந்தமான எந்த ஒரு தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என கட்சியின் நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

தகவல்:-

எம்.நிஜாம் முகைதீன்

மாநில பொதுச்செயலாளர்

எஸ்.டி.பி.ஐ. கட்சி

Close