Adirai pirai
education and jobs உள்ளூர் செய்திகள்

அதிரை இமாம் ஷாபி பள்ளிக்கு இன்று விடுமுறை..!

தமிழகத்தில்  வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிரையிலும், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை பெய்ய தொடங்கிய இந்த மழை, இன்று காலை வரை விடாமல் சாரல் மழையாகவும் கனமழையாகவும் கொட்டி வருகிறது.

இதனால் அதிரையில் இன்று இமாம் ஷாபி பள்ளியில் LKG முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.