ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

ஜியோ பிரைம் உறுப்பினர்கள் ரூ.399-ம், அதற்கு அதிகமாகவும் செய்யும் ரீசார்ஜுகளுக்கு அட்டகாசமான கேஷ்பேக் சலுகைகளை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது

ஜியோ சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள், ஒரே முறை கட்டணமாக ரூ.99-ஐ செலுத்துவதன் மூலம் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆக இயலும். அவ்வாறு இணைந்து கொள்பவர்களுக்கு அந்நிறுவனம் சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது தற்பொழுது ரூ.399-ம் அதற்கு மேலும் செய்யப்படும் ஒவ்வொரு ரீசார்ஜுக்கும் ரூ.2,599 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

இந்த சலுகையானது ஜியோ பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது . இது பற்றி அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது: ஜியோ பிரைம் கேஷ் பேக் சலுகை நவம்பர் 10 முதல் 25-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே அளிக்கப்படும். இந்த கேஷ்பேக் சலுகையில் 3 பிரிவுகள் உள்ளன.

 • ரூ. 400 கேஷ் பேக் சலுகையானது (ரூ. 50 x 8) மதிப்பிலான ஜியோ கேஷ்பேக் நவம்பர் 15 முதல் மைஜியோ-வில் கிடைக்கப்பெறும்.
   • அமேசான் பே, ஆக்சிஸ் பே, ஃப்ரீசார்ஜ், மொபிக்விக், பேடிஎம் மற்றும் போன்பே ஆகிய இ-வாலட்டுகள் மூலமாக ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.300 கேஷ்பேக் சலுகை உடனடியாக வழங்கப்படும்.
    • இ-காமர்ஸ் வவுச்சர்கள் நவம்பர் 20-ம் தேதி முதல் கிடைக்கப்பெறும் இவ்வாறு அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Close