177 பொருட்களுக்கான GST வரி குறைப்பு..!

குவாஹத்தியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட 23-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டத்தில் 177 பொருட்களின் மீதான அதிகபட்ச வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 50 பொருட்களை மட்டுமே அதிகபட்சமான 28% வரிப்பிரிவில் வைக்க முடிவு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 28%லிருந்து 18%ஆக வரி குறைக்கப்பட்டுள்ள பொருட்கள்:

* டிராக்டரின் உதிரிபாகங்கள்

* சேவிங் கிரீம்

* சாக்லேட்டுகள்

* ஷாம்பூ

* பெண்கள் உபயோகப்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள்

* கிரானைட், மார்பிள்ஸ்

ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்கள் மீதான வரி 18%லிருந்து 5%ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவிற்கு வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, செங்கல் தொழில் சார்ந்த சில்லறை வேலை சேவை மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.

ஏசி அல்லாத ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 5% வரியை 1%ஆக குறைக்க வேண்டும் எனவும், ஏசி ஓட்டல்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டி வரியை 12%ஆக குறைக்க வேண்டும் எனவும் அந்த குழு பரிந்துரை செய்திருந்தது. எனவே ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்ட வரியும் குறைக்கப்பட்டிருக்கலாம். வரிவிகிதம் குறைக்கப்பட்ட அனைத்து பொருட்களின் விவரங்கள் முழுவதுமாக இதுவரை கிடைக்கவில்லை. இன்று இரவிற்குள் மொத்த விவரமும் கிடைத்துவிடும்.

எதிர் வரும் குஜராத் தேர்தலில் ஜவுளி பொருட்களின் மீதான வரிவிதிப்பால் பாஜக வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இந்த முறை மத்திய அரசு பின் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Close