ATM ல் பணம் எடுப்போர்களுக்கான எச்சரிக்கை செய்தி..!

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டை திருட ஸ்கிம்மர் கருவியை வைத்தது யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏடிஎம் மையத்தில் இருந்து சிசிடிவி கேமரா வேலை செய்யாதது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கிம்மர் என்றால் என்ன?

ஸ்கிம்மர் என்பது நீங்கள் ஏடிஎம் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது இந்த ஸ்கிம்மர் உங்களுடைய அட்டை பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்ளும். இந்த தகவல்கள் வேறொரு வடிவத்தில் உங்களுடைய பணத்தை திருட பயன்படுத்தப்படும். 

மேலே படித்த விஷயத்தில், அந்த இயந்திரத்தை பயன்படுத்தியவர் உடனடியாக சம்மந்தப்பட்ட (Market Security) அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அந்த ஸ்கிம்மர் எவ்வளவு நாட்களாக தொடர்புடைய இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்றோ அல்லது எத்தனை கிரெடிட் கார்டுகளை பிரதி எடுத்திருந்தது என்றோ யாருக்கும் தெரியவில்லை!! மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் செயல்படும் வாடிக்கையாளர்களையும் கூட இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு ஏமாற்று வேலைகள் பயப்படுத்துகின்றன. 

நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டின் எண் வேறொருவரிடம் இருப்பது தெரிய வந்தால், உங்களுக்கு கார்டு வழங்கியவர்களுக்கு போன் செய்யவும், போலீஸாரிடம் தகவல்களை கொடுக்கவும் வேண்டும். ஆனால் இதற்குள்ளாக உங்கள் கார்டை வைத்திருப்பவர் அதனை தவறாக பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். எனவே இங்கே தரப்பட்டுள்ள சில தவறான பயன்பாடுகளை தெரிந்து கொண்டு இது போன்ற ஏமாற்று வேலைகளிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பிக்க முயற்சி செய்யுங்கள்.

ஸ்கிம்மர்கள் இருப்பதை கண்டறியாமல் இருத்தல் 

உங்களுக்கான தனிநபர் அடையாள எண்ணை (PIN) கேட்கும் ஏடிஎம் அல்லது விற்பனை புள்ளிகளில் ஸ்கிம்மிங் கருவிகள் பொருத்தப்படுகின்றன. எனவே, நீங்கள் கார்டை தேய்க்கும் முன்னர் சற்றே கவனிப்பது நல்லது. ‘ஏதாவது வெளிப்படையான அறிகுறிகள் தென்படுகிறதா என்று எப்பொழுதும் சோதித்துப் பார்ப்பது நல்லது. அதாவது பசை அல்லது உராய்வு ஏற்படுத்தும் அம்சங்கள் உள்ளனவா என்றும் அல்லது தனிநபர் அடையாள எண்ணை அடிக்கும் இடத்தில் ஏதாவது அடையாளங்கள் உள்ளனவா என்றும் அல்லது நீங்கள் கார்டை சொருகும் இடத்தில் ஏதாவது அறிகுறிகள் உள்ளனவா என்றும் பார்க்க வேண்டியது அவசியமாகும்’ என்கிறார் மனீஷா தாகோர். 

நீங்கள் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் உள்ள ஏடிஎம்-களுக்குள் செல்லும் போது இந்த கவனத்தை சற்றே அதிகமாக காட்ட வேண்டும். ஏனெனில் இத்தகைய சூழலில் உள்ள இயந்திரங்களில் எளிதில் ஏதாவது ஒரு ஸ்கிம்மரை இணைத்து விட முடியும். உங்களுக்கு சந்தேகம் வந்தால் வேறு ஒரு ATM-ஐ பயன்படுத்துங்கள்.

Close