அதிரையில் இன்று வீட்டின் பூட்டை உடைத்து மீண்டும் கொள்ளை முயற்சி..! (படங்கள் இணைப்பு)

அதிரை ஆஸ்பத்திரி தெரு டாக்டர் பஜ்லுர் ரஹ்மான் மருத்துவமனை அருகே பூட்டிக்கிடந்த வீட்டில் இன்று மீண்டும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. நள்ளிரவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோ கதவுகளை உடைத்துள்ளனர். இருப்பினும் எந்த பொருட்களும் திருடப்படவில்லை என கூறப்படுகிறது. ஆஸ்பத்திரி தெருவில் நேற்று இதே போல் வேறு ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்படாத நிலையில் இன்றும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Close