அதிரை காலியார் தெரு வழியாக இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு எச்சரிக்கை…

அதிரையில் தற்பொழுது நாய் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள்  சாலையில் செல்வதற்க்கு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காலியார் தெரு பகுதியில் இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை ஏழு முதல் எட்டு நாய்கள் தொடர்ந்து விரட்டி வருகின்றன. நேற்று இரவு ஏராளமான நாய்கள் ஆடு ஒன்றை சூழ்ந்து கடித்துகொண்டிருந்தன. இதனை கண்ட அப்பகுதி நபர்கள் நாய்களை விரட்டி விட்டு ஆட்டினை காப்பாற்றினர்.

இதே போல் அதிரை பேருந்து நிலையம், காலியார் தெரு, சுரைக்காய் கொல்லை, சிஎம்பி லேன், கடற்கரை தெரு, சானாவயல், பழஞ்செட்டித் தெரு, கரையூர் தெரு, ஸிபா மருத்துவமனை அருகில் உள்ள காலனி ஆகிய பகுதிகளில் இந்த தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

அதிரையில் தொடர்ந்து நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் பேரூராட்சி தரப்பில் இது குறித்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Close