Adirai pirai
islam sports இந்தியா

10:45 மணி நேரத்தில் 110 கிலோ மீட்டர்கள் ஓடி சாதனை படைத்த ஹமீத் அஜீஸ்!

ஸ்ரீநகர்-ஐ சேர்ந்த ஹமீத் அஜிஸ் என்ற 22-வயது தடகள வீரர் சுமார் 110 கி.மீ. தூரத்தினை 10 மணி 45 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.  ஒரே நாளில் 100 கி.மீ. தொலைவினை கடந்த, அம்மாநிலத்தின் முதல் நபர் எனும் சிறப்பினையும் அவர் பெற்றுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்; ’55 வயதான ஆஸ்திரேலியர் தான் என் முன்உதாரனமாய் கொண்டுள்ளேன். ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா துறை உதவியால் பல மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றேன். இப்போது 180 கி.மீ. இடைவிடாது மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன். விரைவில் 303 கிமீ உலக சாதனையையும் முறியடிப்பேன்’ என ஹமித் அஜிஸ் தெரிவித்தார்.

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy