மதுக்கூரில் அப்பாவி இளைஞர்கள் கைது… அதிரை அஹமது ஹாஜா தலைமையில் தமுமுக வினர் DSP யிடம் கோரிக்கை.. (படங்கள் இணைப்பு)

இன்று(13/11/17) தமுமுக மதுக்கூர் பேரூர் நகர கிளை கூட்டம் மாவட்ட தலைவர் அதிரை அஹ்மது ஹாஜா தலைமையில் நடைபெற்றது நகர தலைவர் முஜிப்பு ரஹ்மான் மற்றும் மாநில ஊடக பிரிவு து.செயலாளர் பவாஸ் மற்றும் மாவட்ட மமக செயலாளர் ஜபருல்லாஹ் மற்றும் மாவட்ட தமுமுக து.செயலாளர் அதிரை சேக்காதி மற்றும் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாகா சலீம் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.

இதில் மதுக்கூரில் நடைபெறும் அசாதரன சூழல்களை முன்வைத்து கூட்டம் நடைபெற்றது. நள்ளிரவு மற்றும் பகல் வேளையில் காவல் துறையினர் மதுக்கூர் வாலிபர்களை கைது செய்து பொய் வழக்கு போட்டும் சிறையிலும் அடைத்தும் வருவது வாடிக்கையாக நடைபெறுவதை தடுக்கும் வகையில் மதுக்கூர் பகுதியில் தமுமுக சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் தமுமுக தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் தெரிவிக்கபட்டது. அதற்கு பேராசிரியர் அவர்கள் இனி இது போன்று நடக்காத வகையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பேசி அதற்கான தீர்வை பெறுவோம் என்றும் தமுமுக தலைமையகத்தில் மறு உத்தரவு வரும் வரை ஆர்பாட்டம் ஒத்திவைக்குமாறு கேட்டுகொண்டார்.

பின்னர் மதுக்கூர் நிருவாகிகள் மற்றும் மாவட்ட நிருவாகிகளும் வல்லம் DSP ஜெயச்சந்திரன் (மதுக்கூர் பொருப்பு)அவர்களை சந்தித்து இது வரை 13 சகோதரர்கள் காவல் துறையின் பொய் வழக்கில் கைது செய்தும் பொய்வழக்கில் சித்தரித்தும் உள்ளதை எடுத்து கூறியும் அவர்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைத்தனர். தவறும் பட்சத்தில் தமுமுக மாநில அனுமதியோடு மதுக்கூர் ஸ்தம்பிக்கும் வகையில் கண்டன ஆர்பாட்டமும் நடைபெறும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

தகவல் அதிரை வாகா சலீம்

Close