டிசம்பர் 06 அன்று பட்டுக்கோட்டையில் SDPI நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்

SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் நகர கமிட்டி கூட்டம் 12.11.2017 அன்று நகர தலைவர் T.J.மாப்பிள்ளை தம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் Z.முகம்மது இலியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

டிசம்பர் 06 பாபர் மசூதி இடிப்பு 25 ஆண்டுகாள தேசிய அவமானம் நீதி கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம். தேசம் முழுவதும் #SDPI கட்சியின் சார்பில் டிசம்பர் 06 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளை மதுக்கூர் நகரம் சார்பில் துரிதப்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

மக்கள் பணியில் முன்னின்று செயல்பட வேண்டும்; மதுக்கூரில் தொடர்ச்சியாக SDPI கட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள், நிலவேம்பு குடிநீர் விநியோக நிகழ்வுகள், மழை, வெள்ள களப்பணிகள் போன்ற பேரிடர் நிகழ்வுகளை நினைவுபடுத்தி மக்களுக்காக நாம் தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

Close