யாரையும் ஏதிர்பார்க்காமல் சுகாதார பணிகளை சுயமாக செய்து வரும் கடற்கரை தெருவாசிகள் (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைத்தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மழை காலம் என்பதால் இந்த பிரச்சனை அப்பகுதியில் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். 

Close