அதிரை பிறையில் விளம்பரங்களுக்கான கட்டண விபரங்களும், ஆஃபர்களும்..!

அதிரை பிறை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்டு பல செய்திகளை உண்மைதண்மை மாறாமல் உடனுக்குடன் அளித்து வருகின்றோம். அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு ப்ரொஃபசனல் இணையதளத்தை வழங்கி அதில் பலவிதமான தொழில்நுட்ப சேவைகளையும் அளித்து வருகின்றோம். செய்திகள் மட்டுமின்றி டாக்டர் பிறை, மண்டே மசாலா, லேடிஸ் கேர், லாயர் பிறை போன்ற ஏராளமான தொடர்களையும் நாம் பதிந்து வருகின்றோம். இன்னும் சில நாட்களில் பிறை டீல்ஸ் மற்று பிறை புக் சேவையையும் தொடங்க உள்ளோம். உள்ளூர் செய்திகள் மட்டுமின்றி வெளியூர்களிலும் செய்தியாளர்களை நியமித்து வெளியூர் செய்திகளையும் பதிந்து வருகின்றனர்.

மேலும் தொழில் செய்வோர்களுக்காக வாசகர்களுக்கு பிடித்த வகையில் அதிரை பிறையில் மிக மிக குறைந்த கட்டணத்தில் விளம்பரங்களையும் பதிந்து வருகிறோம். அதிரை பிறை தளத்தின் மேல் பகுதியில் லோகோ ஸ்பான்சர் விளம்பரங்களும், தளத்தின் மத்திய பகுதிகளில் பேனர்களாகவும், செய்திகளுக்கு இடையிலும், செய்திகளுக்கு கீழாகவும், வலது புறமும், தளத்தின் கீழ் பகுதியிலும் விளம்பரங்களை பதிந்து வருகிறோம்.  அத்துடன் அதிரை பிறையில் வரும் டாக்டர் பிறை, லாயர் பிறை, மண்டே மசாலா, லேடீஸ் கேர் உள்ளிட்ட சிறப்பு பதிவுகளுக்கான ஸ்பான்சர் விளம்பரங்களும், வீடியோ ஸ்பான்சர் விளம்பரங்களும், வரி விளம்பரங்களும், ஒரு செய்தி விளம்பரங்களும் குறைந்த கட்டணத்தில் பதிவிடப்படுகின்றன.

இதில் தற்போது புதிய சலுகைகளை நாம் வழங்க உள்ளோம்.

புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இலவச அறிமுக செய்தியுடன், முதல் 2 மாதங்கள் இலவசமாக விளம்பரம் செய்ய உள்ளோம். அத்துடன் 6 மாத விளம்பரத்துக்கு கட்டணம் செலுத்துவோருக்கு ஒரு மாதம் இலவசமாக விளம்பரத்தை பதிவிட உள்ளோம்.

நமது தளத்திற்கு தினசரி வரும் பல்லாயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு உங்கள் நிறுவனத்தின் மீது அறிமுகம் கிடைக்கும். அதன் மூலம்உங்கள் வியாபாரமும் நல்ல வளர்ச்சியை சந்திக்கும் என்று நம்புவோம்.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீங்கள் தினசரி செலவிடும், நோட்டீஸ், பேனர், ஆட்டோ விளம்பரம் ஆகியவற்றை விட நமது தளத்தின் மூலம் நீங்கள் பதிவிடும் விளம்பரம் நல்ல பயனை நிச்சயம் அளிக்கும். தற்போது அதிரை பிறையில் தொழில்நுட்பத்தை பன்மடங்கு மேம்பாடு செய்துள்ளதால், நீங்கள் அளிக்கும் விளம்பரங்களின் மூலமாக அதற்குறிய பொருளாதாரம் செலவிடப்படுமே தவிர, இந்த விளம்பரங்கள் அதிரை பிறையின் வர்த்தக நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட அல்ல.

 

எனவே, கடை உரிமையாளர்கள், தொழில்முனைவோர்கள், புதிதாக வியாபாரம் துவங்க உள்ளவர்கள், வீட்டு மனை விற்பவர்கள், பழைய ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்கள் நமது தளத்திற்கு விளம்பரங்களை அளித்து நீங்களும் பயன்படுத்திக்கொண்டு எங்களுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு,

நிர்வாக குழு, அதிரை பிறை

Close