சவுதியிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்ட பயணி அபுதாபியில் மரணம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் IX-322 சவூதி அரேபியா ரியாத்திலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அதில் பயணம் மேற்கொண்ட கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முஹம்மது சலீமுக்கு (35) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து விமானம் அபுதாபியில் அவசரமாக பிற்பகல் 3;51 க்கு தரையிறக்கப் பட்டது. அங்கு சலீம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சலீம் ரியாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த 14 வருடங்களாக எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

A passenger flying home to India from Saudi Arabia died in an Abu Dhabi hospital on Wednesday. The plane made an emergency landing in the UAE capital after he complained of discomfort.

©️inneram

Close