ஆண்கள் என்றால் குற்றவாளிகளா..?

பெண்கள் தினத்திற்கு வாழ்த்து கூறியவர்கள் ஆண்கள் தினத்தை பற்றி பேசினாலேயே தவறு என்கின்றனர். பெண்ணுரிமை என்பது அவசியமான ஒன்று. அவர்கள் மீதான பாலியல் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது.

ஆனால், அதே சமயம் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் நாம் மதிக்க தவறி விடுகிறோம். உணர்ச்சிவசப்பட்டால் பெண்கள் அழுது தீர்த்துவிடுவார்கள். ஆனால், ஆண்களின் உணர்வு உள்ளுக்குள் உருகிக்கிடக்கின்றன. தாய், சகோதரி, மனைவி, மகள் என அனைத்து பெண்களின் மீதான பொறுப்புகளை தலைமேல் சுமந்துகொண்டு, பிறர் என்ன பேசினாலும் காதுகளில் வாங்கிக்கொள்ளாமல் உழைத்து உழைத்து தேய்ந்து போன பாவப்பட்ட ஜீவன் ஆண்.

ஒரு பேருந்தில் பெண் இருக்கையில் ஆண் அமர்ந்திருந்தால் அவனை திட்டி அங்கிருந்து எழுப்பும் இந்த சமூகம், ஆண் இருக்கையில் பெண் அமர்ந்திருந்தால் வாயை மூடிக்கொண்டு மவுனியாக இருந்துவிடுகின்றது. பெண்களுக்கு மட்டும் தான் உணர்வுகள் உள்ளதா? ஆண்களுக்கு இல்லையா?

ஒரு தவற்றில் பெண்ணுக்கு தொடர்பு இருந்தாலும் முதலில் அந்த சமூகம் தவறாக பார்ப்பதும் ஆணை தான். எல்லா ஆண்களையும் தவறான கண்ணோட்டத்தில் சந்தேகிக்கும் சமூகம் இன்னாளில் திருந்த வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவே தவிர பெண்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காக அல்ல…

ஒரு பிரச்சனை என்றால், அவன் தான் காரணமாக இருப்பான் என்று ஆண் மீது குற்றம்சுமத்திவிடாமல் தவறு யார் மீதுள்ளது என்பதை அறிந்து ஆணுக்கும் பெண்ணும் சமநீதி அளிப்பது இச்சமூகத்தின் கடமை.

ஆண்களும் பெண்களும் சமூகத்தின் இரு கண்களை போன்றவர்கள்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close