தமிழ்நாடு கால்பந்து அணிக்கு அதிரை AFFA அணி வீரர் அபூபக்கர் தேர்வு..!

அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்தவர் ஜமால் முஹம்மது. அதிரை AFFA கால்பந்து அணியின் முன்னாள் வீரரான இவருடைய மகனின் பெயர் அபூபக்கர். AFFA அணியில் தற்போது விளையாடி வருகிறார். இந்த நிலையில் இவர் இன்று தமிழ்நாடு ஜூனியர் கால்பந்து அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு கால்பந்து அசோசியேசன் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளது. அதில் நாளை முதல் 30 ஆம் தேதி வரை புதுக்கோட்டையில் நடைபெறும் கால்பந்து பயிற்சியில் கலந்துகொள்ளுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார். கால்பந்தில் தமிழ்நாடு அணிக்காக தகுதிபெற்று அதிரைக்கு பெருமை சேர்த்த அபூபக்கருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close