Advertisement

' />

அதிரை APL கிரிக்கெட் தொடர் – அதிரை AFCC அணி தோல்வி!

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC)  நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி  நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன.12ம் நாளான இன்று இரண்டு அரை இறுதி போட்டிகள் நடைப்பெற்றன.முதல் போட்டியில் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியை எதிர்த்து தஞ்சை RVMCC அணி விளையாடியது. இதில் ஸ்ரீ கணேஷ் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முண்ணேறியது.

இன்று மாலை நடைப்பெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் அதிரை AFCC அணியை எதிர்த்து போலிஸ் அணி விளையாடியது. இதில் போலிஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் போலிஸ் அணி வெற்றி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

APL இறுதி போட்டி நாளை மறுதினம் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணியும் போலிஸ் அணி விளையாட உள்ளன. 

அதிரை APL கிரிக்கெட் தொடர் குறித்த தினசரி பதிவுகளுக்கு இணைந்திருங்கள் அதிரை பிறையுடன்.

Advertisement

Close